in

இனி நான் உன் அருகில் வரமாட்டேன்.. நடிகர் பாலா


Watch – YouTube Click

இனி நான் உன் அருகில் வரமாட்டேன்.. நடிகர் பாலா

 

மலையாளத்தில் முன்னனி நடிகராக திகழ்ந்தாலும் தமிழில் ஒருசில படங்களில் மட்டுமே தலை காட்டினார் நடிகர் பாலா.

சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் தற்பொழுது குணமடைந்து பழையபடி நடிக்க தொடங்கி விட்டார்.

இவர் எப்பொழுதுமே பேட்டி கொடுக்கும் போது தனது குழந்தையை பற்றி தான் பேசுவார், இவர் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதன் பிறகு நடிகர் பாலாவுக்கும் எலிசபெத்துக்கும் திருமணம்...ஆனது இவர்களின் விவாகரத்து குறித்தும் வதந்திகள் பல நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அண்மையில் இவர் கொடுத்த ஒரு பேட்டியில் என் மகள் மீது நான் அதிகமாக பாசம் வைத்திருக்கிறேன் என்றார், அதற்கு மறுப்பு தெரிவித்த அவரது மகள் அவந்திகா எனது தந்தை கூறுவது பொய் அவர் என்னை எப்பொழுதும் நேசிக்கவில்லை என்னையும் என் குடும்பத்தையும் துன்புறுத்தினார்.

நான் குழந்தையாக இருக்கும் பொழுது குடித்து விட்டு என் அம்மாவை அடித்து துன்புறுத்துவார், மகளின் இந்த பேட்டிக்கு மறுப்பு தெரிவித்த பாலா எனது மகள் இரண்டரை வயது இருக்கும் போது நான் அவரை பிரிந்து விட்டேன்.

இப்பொழுது எனது வாழ்க்கையில் அதிக வலியை உணர்கிறேன் நீ ஐந்து மாத கருவாக இருக்கும் போது உனக்கு அவந்திகா என்ற பெயர் வைத்து மகிழ்ந்தவன் நான் உன்னை எப்பொழுதும் நேசிக்கிறேன் கடவுள் சத்தியமாக ஒருபோதும் உன் அருகில் இனி நான் வரமாட்டேன் ஆனால் நீ எப்பொழுதுமே எனக்கு குழந்தை தான் என்று உருகி பதில் அளித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

குக் வித் கோமாளி, டாப் குக் டூப் குக் டைட்டில் Winners

விஜய் டிவி..யிலிருந்து வெளியேறிட்டனா!.. என்னடா சொல்றிங்க…