தொழில் முதலீடுகள் பெற்றதில் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும்- பாமக நிறுவனர் ராமதாஸ்
தொழில் முதலீடுகள் பெற்றதில் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும் என முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சுவதாகவும், பார்முலா 4 கார்பந்தயம் சென்னையில் நடத்துவது இப்போது அவசியமான ஒன்றா என்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கார் பந்தயம் நடத்திட்டு இருந்தாங்க அதனை இப்போ நாம காப்பியடிப்பதா என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் 99ஆயிரத்து 93 கோடி முதலீடு ஈர்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளதாகவும் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் கூறியிருந்தார்.
ஆனால் தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினால் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என தெரிவிப்பதாகவும் அவர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனியை வலியுறுத்தினார்.
ஆனால் இப்போது மரபு இல்லை என கூறுவது ஏற்கமுடியாது அவர்பதிலளிக்க வேண்டுமெனவும் ,வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை வெளிவரும் என முதலமைச்சர் அஞ்சுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மூதலீடுகளை ஈர்க்க மூன்றாண்டுகளில் பத்துலட்சம் ஒப்பந்தம் கையெழுத்திட்டால் மட்டும் முதலீடு வராது என்றும் இடஒதுக்கீடு பின்பற்றாமல் தமிழக அரசு பணியிடங்கள் நிரப்பியுள்ளதாகவும், சமூக நீதியை பின்பற்றாமல் அரசு பணியிடங்கள் நிரப்பட்டுள்ளதால் சமூக நீதியை காலில் போட்டு மிதித்து தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்த தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகத்திலுள்ள 13 மருத்து கல்லூரியில் கல்லூரியின் ( டீன்) முதன்மையவர்களை நியமிக்காமல் உள்ளதால் முதன்மையவர் பணிகளை குறித்த நேரத்தில் நியமிக்காமல் உள்ளது நியாயம் இல்லை என்றும் அவர்கள தேர்வு செய்யாமல் என்ன முக்கியமான பணி தமிழக அரசுக்கு உள்ளது என தெரியவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
விண்ணை தொடும் அரிசியின் விலையை கட்டுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சன்ன ரக அரிசி கிலோ 80 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கபட்டுள்ளதாகவும் தமிழகத்தில் அரிசி உற்பத்தி குறைந்ததால் அரிசி விலையேற்றம் அடைந்துள்ளதாகவும், கூட்டுறவு அங்காடியில் சன்னரக அரிசி விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பணப்பலன்கள், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், கந்து வட்டி திமிலங்களை கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும், கந்துவட்டி காரர்களுடன் காவல் துறையினர் கூட்டணி வைத்து வேடிக்கை பார்ப்பதாகவும் மதுரையில் மென்பொருள் நிறுவனத்தாரிடம் கடன் வாங்கியரிடம் 300 சதவிகிதம் வட்டி கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தெரிவித்தார்.
குட்கா, மெல்லும் புகையிலை பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், கூல் லிப் என்ற புகையிலை எல்லா இடங்களிலும் கிடைப்பதால் அனைத்து வகை புகையிலை பொருட்களை தடை செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
பார்முலா 4 கார்பந்தயம் சென்னையில் நடத்துவது அவசியமான ஒன்றா அது நடத்தவில்லை என்றால் மக்கள் தூங்கமாட்டாங்க, சாபிடமாட்டாங்க, மழை பொழிவு இருக்காது, சூரியன் உதிக்காது, பூ பூக்காது, சந்திரன் முழுநிலவு வராதா என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில் பொழுதை கழிப்பதற்கு கார் பந்தயம் நடத்திட்டு இருந்தாங்க அதனை இப்போ நாம காப்பியடிக்கனுமா என தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.