இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் இருக்காது
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் இருக்காது எனவே திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கூறி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில். மகேஷ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு கேட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில். மகேஷ் பிரச்சாரம் செய்தார்.
புதுக்குடி, சானுரப் பட்டி புதுப்பட்டி, பூதலூர் நால்ரோடு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார்.
வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு கேட்டார்.
வேட்பாளர் முரசொலிக்கு மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
தொண்டரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது குழந்தையை கையில் தூக்கி கொஞ்சினார் அமைச்சர் அன்பில். மகேஷ்
திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் சுங்கச்சாவடி முழுமையாக அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் மக்கள், பெண்கள் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்தவர் திமுகவுக்கு வாக்களித்து முரசொலியை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.