கப்பம் கட்டாவிட்டால் நியாய விலை கடை பணியாளர்கள் பணியிடம் நீக்கம் தலைவர் பாலசுப்ரமணியன் பேட்டி
அரசு அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கப்பம் கட்டாவிட்டால் நியாய விலை கடை பணியாளர்கள் பணியிடம் நீக்கம் செய்வதாக குற்றம் சாட்டி சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட அமைப்பு கூட்டம் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் பொது விநியோகத் திட்டத்திற்கு என்று தனித்துறை அமைக்க வேண்டும்
நியாயவிலை கடைகளில் சரியான எடையில் தரமான பொருளை வழங்க வேண்டும் பணி வரைமுறைப்படி வாரிசு வேலை வழங்க வேண்டும்
திருச்சியில் நியாயம் கேட்ட பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் இதனை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் பெண் பணியாளர் மகன் மீது கஞ்சா வழக்கு காவல்துறையினர் பதிவு செய்கின்றனர்
நாளை தேனி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
தமிழக அரசு எங்களது சங்கத்தை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், திருச்சியில் தனிநபர் ஒருவர் கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வந்து இறங்குவதாகவும் அவர் தனி ஆளாக லட்சக்கான ரூபாய் சம்பாதித்து வருகிறார் பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்கின்றனர்.
அரசுக்கு மாதம் தோறும் கப்பம் கட்டாவிட்டால் அந்த பணியாளர்கள் மீது பணிநீக்கம் பணியிடை நீக்கம் போன்ற பழி வாங்கும் நடவடிக்கையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.
பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்குவதற்கு பணியாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் இப் பொருள்களை பொதுமக்கள் விரும்பி வாங்கினால் மட்டுமே அதை விற்பனை செய்ய முடியும் கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய முடியாது விற்பனை ஆகாத பொருட்களை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்