மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்கியதில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறி விவசாயிகள் சாலை மறியல், அரசை குறை கூறினால் பொய் வழக்கு போடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டு
கடந்த சம்பா பருவத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் முப்பதாயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் 277 கிராமங்களில் வெறும் 64 கிராமங்களுக்கு மட்டுமே குறைந்த அளவு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் மற்றும் வேளாண் துறையினர் இணைந்து முறைகேட்டில் நடைபெற்றுள்ளதாகவும் விவசாயிகளுக்கு குற்றம் சாட்டினர். இன்சூரன்ஸ் வழங்கக்கோரி இன்று மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு இயற்கை விவசாயி இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.. விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் அரசை குறை கூறினால் பொய் வழக்கு போடுவதாகவும் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஆனதாண்டபுரம் முன்னோடி விவசாயி அன்பழகன் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் வாங்க கோரியும்,, தமிழக அரசு அறிவித்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனே வழங்க கோரியும், பயிர் காப்பீடு நிறுவனங்கள் தற்போது கணக்கீடு செய்யும் முறையை மாற்றக் கோரியும், பயிர் காப்பீடு நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த கோரியும் முழக்கமிட்டு, பின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 100 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சாலை மறியல் செய்தன.இந்த சாலை மறியலால் மயிலாடு துறை 10 கும்பகோண சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.