ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு
கருவறைக்குள் நுழைய விடாமல் இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டார்.
இசைஞானி இளையராஜ வெற்றிகரமாக தனது இசை பயணத்தை 45 வருடங்கலூக்கு மேலாக தொடர்ந்து வருகிறார். 80 வயதிலும் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் இவரின்’ இசை கானத்தில் ‘விடுதலை பார்ட் 2’ டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்ற இளையராஜா, பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதிகளுக்குச் சென்றார்.
ஆனால், ஆண்டாள் கோயில் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்றபோது, அவரை கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..
பின்னர் அர்த்த மண்டபத்திற்கு வெளியில் இருந்து பிரார்த்தனை செய்த இளையராஜாவை பூசாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது, நெட்டிசன்கள் இந்த செயலை கண்டித்தும், பாரம்பரிய நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர் என்று கொதித்ததெழுகின்றனர்.
நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு கோவிலில் பூஜைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று இளையராஜாவுக்கும் இப்படி ஒரு நிலை.