சட்டவிரோதமாக பதிக்க வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோதமாக பதிக்க வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மற்றும் பட்டாசு பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் திருப்பதி(35). இவர் சிவகாசியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். சிவகாசி விஜயலட்சுமி காலனியில் உள்ள கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார்.
அங்கு அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த் துறையினருக்கு புகார் கிடைத்ததன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் குடோனில் சோதனை செய்தபோது 250 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் திருப்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.