in ,

நான் முதல்வன் திட்டம் தமிழக மாணவர்கள் லண்டன் பயணம்


Watch – YouTube Click

நான் முதல்வன் திட்டம் தமிழக மாணவர்கள் லண்டன் பயணம்

தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தற்பொழுது லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 அறிவியல் மாணவர்களை தேர்வு செய்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கல்லூரிகள் மூலம் பெற்றது. இதற்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் பெற்ற 1,267 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கு பல திறனாய்வு தேர்வுகள் நடத்தி, அதில் 100 பேரை தேர்வு செய்தனர். அதன்பின்பு அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அந்த சிறப்பு பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவ மாணவிகள், லண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் இரு பேராசிரியர்களும் உடன் சென்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5.39 மணியளவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலம், லண்டன் புறப்பட்டுச் சென்ற மாணவ மாணவிகளை, அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த மாணவர்கள், பெற்றோர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். லண்டன் செல்லும் மாணவ மாணவிகளுக்கு வரும் 16ம் தேதி வரையில் சிறப்பு பயிற்சிகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு மாலை அணிவித்து கிரீடம் வைத்து உற்சாகத்துடன் வரவேற்ப்பு

புதுச்சேரியில் நடு வீதியில் பற்றி எரிந்த பைக் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்