in

கீழே விழுந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை


Watch – YouTube Click

கீழே விழுந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் இ.கே. ஆர் மருத்துவமனையில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு தீவிர அறுவை சிகிச்சை செய்து சாதனை.

வீட்டில் இருந்து வெளியே வந்த போது தவறி விழுந்ததில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கை, கால் செயல் இழந்த முதியவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு முதியவரை ஆபத்தான நிலையில் இருந்து செஞ்சி மருத்துவர்கள் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.

செஞ்சி வட்டம் ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(72) இவர்  வீட்டில் வெளியே வரும் போது தவறி கீழே விழுந்ததில் மூளையில் இருந்து கழுத்து வழியாக முதுகு தண்டுவடத்திற்கு வரும் நரம்பு பாதிக்கப்பட்டதில் ஒரு பக்கம் கை, கால் செயல் இழந்தும், மூச்சு விட சிரமபட்டுள்ளார்.

உடனடியாக இவரை செஞ்சியில் உள்ள இ.கே.ஆர். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்தமுருகன் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் உடனடியாக எம்ஆர் ஐ.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டதில் மூளையில் இருந்து தண்டுவடத்திற்கு வரும் நரம்பு 3 இடங்களில் பாதித்துள்ளதை கண்டுபிடித்தனர்.

உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் முதியவர் உள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மயக்க மருந்து நிபுணர்கள் சுதா, ராஜராஜன் ஆகியோ உதவியுடன் நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முதியவர் நலமுடன் காணப்பட்டார்.


Watch – YouTube Click

What do you think?

சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்த போலீசார்