in

பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்

பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதலே சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது விட்டு, விட்டு லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதாலும் பரங்கிப்பேட்டை சுற்று வட்டார பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேலங்கிராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சாமியார்பேட்டை கிராமத்தில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் அலைகள் பல மீட்டர் தூரம் அளவிற்கு எழும்பி காட்சியளிக்கிறது.

இதனால் மீன்பிடி படகுகள் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

What do you think?

பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல் மழையால் படகு சவாரி நிறுத்தம்

பாடலீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத குருவார பிரதோஷ வழிபாடு