கடலூர் மாவட்டத்தில் பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கர் பச்சனுக்கு ஆதரவாக திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
கடலூரில் இன்று OT மணி கூண்டு அருகே கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு தங்கர் பச்சன் அவர்கள் பிஜேபி மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார் இதனை ஒட்டி பிஜேபியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் பிரச்சார வேனில் சந்தர்ப்பச்சனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அப்பொழுது திரு அண்ணாமலை அவர்கள் பேசுகையில் திமுக தேர்தல் அறிக்கை என்பது வெற்று அறிக்கை என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினார் கடலூர் பாராளுமன்ற தொகுதி மிகப் பெரியது என்றும் மேலும் மோடி வீடு திட்டத்தில் 68.323 பேர் கடலூர்மாவட்டத்தில் பயன் அடைந்து உள்ளனர் என்றும் மூன்று லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் தரப்பட்டுள்ளதாகவும் மேலும் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் 30,000 குபாய் வீதம்
2 லட்சத்து 65 ஆயிரத்து 765 விவசாயிகள் வங்கி கணக்கின் முலம் பயன்பெற்று உள்ளனர்
கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் TRV ரமேஷ் மீது சரியில்லாதவர் என்று குற்றம் சாட்டினார் பாராளுமன்ற தேர்தல் 20 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி தொண்டர்கள் அனைவரும் ஒவ்வொரு பகுதியாக சென்று Pmk மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்
இன்னிகழ்ச்சியில் Pmk கடலூர் மாவட்ட செயலாளர் சன்.முத்து கிருஷ்ணன் BJP கிழக்கு மாவட்டபாராளுமன்ற பொறுப்பாளர் திரு சாய் சுரேஷ் அவர்களும் இணைப் பொறுப்பாளர் திரு கோவிலானூர் மணிகண்டன் உட்படகட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்