in

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தீர்த்த படித்துறையில் பூணூல் அணிந்து வழிபாடு 

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தீர்த்த படித்துறையில் பூணூல் அணிந்து வழிபாடு 

 

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி ஆற்றின் புனித துலா கட்டத் தீர்த்த படித்துறையில், ஏராளமானோர் பூணூல் அணிந்து வழிபாடு நடத்தினர்.

ஆடி மாதம் அமாவாசை முடிந்து ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியில், ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணியும் வைபவம், பூணூல் மாற்றுதல், புனித சடங்கு செய்தலை ஒரு சில பிரிவினர் செய்வது வாடிக்கை அதன்படி, மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் புனித துலா கட்டத்தில் ஏராளமானோர் ஆவணி அவிட்டத்தை கடைபிடித்து, வைதீக முறைப்படி பூணூல் அணியும் சடங்கு நடத்தினர்.

பின்பு காயத்ரி மந்திரத்தை ஓதி, வழிபாடுகள் செய்தனர். வேத பாராயணம் செய்யவும், வேதங்கள் ஓதும் போது ஏற்படும் சொல் குற்றங்கள் பொருள் குற்றங்களை நீக்கும் சடங்காகவும், பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்று வருகிறது.

பழைய பூணூலை அகற்றிவிட்டு வேதியர்கள் வழிகாட்டுதல்படி மந்திரங்கள் ஓதி புது பூணூல் அணிந்து கொண்டனர். உபாகர்மா எனப்படும் பூணூல் அணிவது, வேத கல்வி ஆரம்பிப்பது இந்த நாளில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

இதேபோல் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூணூல் அணியும் சடங்கு ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நடைபெற்றது.

What do you think?

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மாரத்தான் ஓட்ட போட்டி

மக்கள் தலைவர் ஜி கே மூப்பனார் 93 வது பிறந்தநாள் விழா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை