in

43 நாட்களில் நிறைந்த நிலையில்காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியை தாண்டியது

43 நாட்களில் நிறைந்த நிலையில்காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியை தாண்டியது

 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 43 நாட்களில் நிறைந்த நிலையில் கடந்த இரு நாட்களாக எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியை தாண்டியது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகை புரிந்தனர்.

இதையடுத்து பழனிக்கோயில் உண்டியல்கள் 43 நாட்களில் நிறைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் ஐந்து கோடியே மூன்று இலட்சத்து பத்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கிடைத்தது.

வெளிநாட்டு கரன்சிகள் 1,123ம் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1,346 கிராமும், வெள்ளி 31,595 கிராமும் கிடைத்தது.

இவை தவிர பக்தர்கள் பித்தளை, தாமிரம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட வேல், கடிகாரம், ஏலக்காய், நவதானியங்கள், முந்திரிப்பருப்பு பட்டாடைகளையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

What do you think?

ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

புதுச்சேரி எஸ்.ஆர்.சுப்ரமணியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி