in

கரூரில் எமதர்மன் வேடமணிந்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்


Watch – YouTube Click

கரூரில் எமதர்மன் வேடமணிந்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

 

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் வாகனம் பறிமுதல், அபராதம், வழக்குப்பதிவு மற்றும் லைசென்ஸ் ரத்து செய்யும் நடவடிக்கைகளிலும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

நான்கு சக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை, வாகனம் இயக்க அனுமதிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கோடு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் கார்னர் பகுதியில் தனியார் அமைப்பைச் சேர்ந்த பொன்.முத்துக்குமார் என்பவர் எமதர்மன் வேடமணிந்து போக்குவரத்து போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை இருசக்கர வாகனத்தில் சென்று மடக்கிப்பிடித்து எமதர்மன் வேடமணிந்த நபர், பாசக்கயிற்றை வீசி பிடித்தார். கரூர் மாநகரின் முக்கிய சந்திப்புகளில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் சென்று, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். போலீசாருக்கு பயந்து ஹெல்மெட்டை எடுத்து வராதீர்கள்.

ஹெல்மெட் இருசக்கர வாகனத்தின் முன்புறம் வைத்து விட்டு வாகனத்தை ஓட்டாமல், தலையில் அணிந்து கொள்ளுங்கள் என, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

அம்பானியை அழ வைத்த ஆனந்த அம்பானி… ஆனந்த அப்படி என்ன கூறி இருப்பார்?