in

கரூரில் திரையரங்கில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் ஒருமையில் பேசுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு


Watch – YouTube Click

கரூரில் திரையரங்கில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் ஒருமையில் பேசுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு

 

கரூரில் திரையரங்கில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் இடத்தில் ஒருவர் மட்டுமே 100 பேருக்கும் விற்பனை செய்வதால் தாமதம் ஏற்படுவதாகவும், இது குறித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் ஒருமையில் பேசுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு – 10 ரூபாய் கடலையை 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் புகார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் கலையரங்கம் எனும் பெயரில் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. அப்படத்தை பார்க்க இன்று மாலை சுரேஷ் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இடைவேளையில் தனது குழந்தைகளுக்காக தின்பண்டங்கள் வாங்க திரையங்கத்தினுள் செயல்படும் கேண்டீனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நூற்றுக் கணக்கானோர் நின்று கொண்டிருந்துள்ளதாகவும், திண்பண்டங்களை எடுத்துக் கொடுக்கவும், பணம் பெற என அனைத்து வேலைகளுக்கும் ஒருவரே வேலை பார்த்துள்ளார். QR Code மூலம் பணம் செலுத்தும் வசதியும் இல்லாததால், இடைவேளை விடும் அந்த 10 நிமிடத்தில் எவ்வளவு பேர் அந்த ஒருவரிடம் மட்டும் திண்பண்டங்களை வாங்க முடியும், கூடுதலாக பணியாளர்களை அமர்த்தலாம் என அங்கிருந்த கேண்டின் மேலாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

திரையரங்க மேலாளர் செல்போன் எண் கொடுங்கள் கேட்கிறேன் என கேட்டதற்கு வெளியே வாசலில் இருக்கிறது போய் பார்த்துக்கொள் என மீண்டும் ஒருமையிலேயே பேசியுள்ளனர் ஊழியர்கள். அப்போது, அங்கு வந்த மேலாளரும் மேலாளர் என்று சொல்லாமலே திரைப்படம் பார்க்க வந்தவர்களை பார்த்து மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அருகில் உள்ள மற்ற திரையரங்க மேலாளர் படம் பார்க்க வந்தவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அதற்குள் திரைப்படத்தின் மீதி படமும் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.

தின்பண்டங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மட்டுமல்லாமல், இருக்கின்ற 10 நிமிட இடைவேளையில் திண்பண்டங்களை வாங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், இது தொடர்பாக திரையரங்க மேலாளரிடம் கேட்டால் ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், வாங்கும் திண்பண்டங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ரசீது கொடுப்பது இல்லை. வெளியில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் கடலையை திரையரங்கிற்குள் 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினார்.


Watch – YouTube Click

What do you think?

என்னை தேடி வராதீர்கள் ரசிகர்களே உங்களைத் தேடி நான் வருகிறேன்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டி