in ,

மதுரையில் நரிக்குறவ சமூக மக்களின் குலதெய்வ வழிபாடு கோவில் திருவிழா நெய் ரொட்டியில் தலை கைகளை வைத்து நூதன வழிபாடு

மதுரையில் நரிக்குறவ சமூக மக்களின் குலதெய்வ வழிபாடு கோவில் திருவிழாவில் அடுப்பில் வைக்கப்பட்ட கொதிக்கும் நெய் ரொட்டியில் தலை கைகளை வைத்து நூதன வழிபாடு.

உடல்நலத்துடன் உழைத்து வாழ வேண்டி 56 ஆண்டுகளாக வழிபாட்டில் ஈடுபட்டுவரும் நரிக்குறவ சமூகத்தினர்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அருகேயுள்ள சௌந்திரபாண்டியன் நகரில் 500க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமூக மக்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள ஆதிபராசக்தி கோவிலில் ஊர் திருவிழா நடைபெற்றுவருகிறது.

இவ்விழாவின் ஒரு நிகழ்வாக நரிக்குறவ சமூகத்தினருக்கு சொந்த்தான குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் சுவாமிக்கு வழிபாடு நடத்தும் வகையில் அங்குள்ள நரிக்குறவ சமூக மக்களால் நூதன வழிபாடு நடைபெற்றது.

பாரம்பரிய குல வழக்கப்படி நடைபெறும் இந்த வழிபாட்டின்போது அங்குள்ள நரிக்குறவ சமூகமக்கள் தாங்கள் இந்த வழிபாட்டிற்காக நேர்த்திகடன் இருந்து உழைத்த பணத்தில் கோதுமை மாவு மற்றும் நெய் வாங்கி விறகு அடுப்பில் தீயை மூட்டி இரும்பு சட்டியை வைத்து கோதுமை ரொட்டியை சூடான நெய்யில் பொறிக்கின்றனர்

அதில் மேலாடை அணிய ஆண் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டிற்கான கீழாடையை அணிந்தவாறு சாமி ஆடியபடி வந்து அடுப்பில் உள்ள சூடான சட்டியில் நெய் ரொட்டியில் தலையையும் கைகளையும் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் ஒரு பக்தர்களின் தலை மூலமாக நெய்ரொட்டியை எடுத்து அம்மனுக்கு படைத்தனர்

நரிக்குறவ சமூக மக்கள் உடல்நலத்தோடு இருந்து உழைத்துவாழ வேண்டியும., இயற்கைகளை பாதுகாக்க வேண்டியும் நூதன முறையில் குல வழக்கப்படி எரிந்துகொண்டிருக்கும் அடுப்பில் உள் சட்டியில் கொதிக்கும் நெய்யில் உள்ள ரொட்டியில் தலையை வழிப்பட்டு வித்தியாசமான வழிபாடு நடத்தினர்

What do you think?

சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

மண்ணாடிபட்டு தொகுதி பாஜக பிரமுகர் சீனுவாச மூர்த்தி தலைமையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா