மயிலாடுதுறையில் பேருந்து அருகே வந்த ஆட்டை விரட்டி விட சென்ற பொழுது பேருந்து மோதி கிளீனர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டைச் சேர்ந்தவர் ரஹீம், 65 வயதான இவர் மயிலாடுதுறையில் தனியார் பேருந்து ஒன்றில் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து மயிலாடுதுறை வந்த பேருந்து முத்து வக்கீல் சாலை என்ற இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, பார்க்கிங் செய்வதற்காக வண்டி பின்னால் சென்றது. அப்பொழுது வண்டியின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் அதனை விரட்ட சென்ற ரஹீம் மீது பேருந்து மோதியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய மயிலாடுதுறை காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், பேருந்தை பறிமுதல் செய்தனர். பேருந்து ஓட்டுனர் ஹாஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது