in

மயிலாடுதுறையில் ஒரு நாள் மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதம்

மயிலாடுதுறையில் ஒரு நாள் மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதம்

 

மயிலாடுதுறையில் ஒரு நாள் மழைக்கே சேதமடைந்த முக்கிய சாலைகள், வடிகால் வசதிகளை சரி செய்யாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று விடிய விடிய பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியு உள்ளது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு வடிகால் வசதிகள் சீர் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக எந்த பணியும் சரிவர செய்யவில்லை. இதன் காரணமாக சாலைகளில் தேங்கிய தண்ணீர் வடியாமல், முக்கிய சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பட்டமங்கல தெரு மகாதான தெரு உள்ளிட்ட கடைவீதிகள் அமைந்துள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் சாலைகள் ஒரு நாள் மழைக்கே சேதமடைந்துள்ளன.

வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெருத்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். உடனடியாக வடிகால்களை சீரமைத்து தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

ரஜினியின் உடல்நிலை …பாதிப்பு…காரணம் லொகேஷ்… குற்றசாட்டு