in

நாகை வேதாரண்யம் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சிந்தாமணிக்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.

முன்னதாக அரச, வேப்ப மரங்களை குளிப்பாட்டி மஞ்சள்பொடி மாப் பொடி, இளநீர், சந்தனம், நெய்,தேன், பன்னீர், பால், தயிர், உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, அரச மரத்தை ஆணாகவும், வேப்பமரத்தை பெண்ணாகவும் பாவித்து அரச மரத்திற்கும் பட்டுவேட்டியையும் வேப்பமரத்திற்கு பட்டுபுடவையும் கட்டி மலர் மாலை அணிவித்து திருமணத்திற்கு உண்டான அனைத்து பூஜைகளும் நடைபெற்றது.

வேப்பமரத்திற்கு சிவாச்சாரியார் மூலம் தாலி கட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த அரசு, வேம்பு திருமணத்தில் கலந்து கொண்டால் திருமண தடை உள்ள பெண்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். இதனை அடுத்து பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

நாகை அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புறவு செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை

மதுரையில் பழுதாகி நின்ற மாநகர பேருந்தை பள்ளி மாணவர்கள் உதவியுடன் ஓராம்கட்டிய சம்பவம்