புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் நிர்ணயம்
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை பாதிக்காத வண்ணம் கட்டணம் நிர்ணயம்
அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
பாஜக -என். ஆர். காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் செய்ய பார்க்கிறார்கள், தொடர்ந்து பொய் சொல்லி உண்மையாக்கி வெற்றி அடைந்துள்ளனர் என விமர்சனம்.
நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் தரநிலையை மதிப்பீடு செய்யும் நாக் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு “ஏ” கிரேடு தரச்சான்று வழங்கியுள்ளது.
தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் (NAAC) தரநிலை வெளியீட்டு விழா தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. விழாவில் கல்வித்துறை அமைச்சர்
நமச்சிவாயம் NAAC குழு கல்லூரிக்கு வழங்கிய தர நிலையை வெளியிட்டார்.