in

புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கப்படும் ரங்கசாமி அறிவிப்பு


Watch – YouTube Click

புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கப்படும். ரங்கசாமி அறிவிப்பு.

ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சர்க்கரை,எண்ணெய்,பருப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல்..முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமானது (ICMR-National Institute of Nutrition) இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவில் உணவு முறை Diet and Bio-marker Study in India (DABS-I) குறித்து நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.இந்தக் கணக்கெடுப்பு.

2023 ஆகஸ்ட் மாதம் முதல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 24 மாநிலங்களில் தரவு சேகரிப்பை முடித்துள்ளனர். இப்போது மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைத் இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர். கணக்கெடுப்பு நடத்துவதற்காக பிரதேசங்களில் புதுச்சேரியும் ஒன்று. தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு பிரந்தியங்களை உள்ளடக்கிய 50 வெவ்வேறு வார்டுகள் மற்றும் கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இக்கணக்கெடுப்பை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவிைல் தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசுச் செயலர் முத்தம்மா. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவன மூத்த ஆராய்ச்சியாளர் ஆனந்தன். நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மஞ்சு ராகி, விஞ்ஞானி Dr.தனலட்சுமி மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி… இந்த ஆய்வு மக்களின் உணவு பழக்க வழக்கங்களை கண்டறிந்து சிறு வயதிலிருந்து நல்ல ஊட்டச்சத்தான உணவு வகைகளை வழங்குவதற்கான ஏதுவாக இது அமையும் என தெரிவித்தவர்.

அரசு மூலம் குழந்தைகளுக்கு எந்தெந்த வகையில் ஊட்டச்சத்தான உணவுகளை கொடுக்க முடியுமோ அதைக் கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.அந்த வகையில் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பால் பிஸ்கட் உடன் பழம் மற்றும் மாலையில் சிறுதானிய உணவுடன், சுண்டல் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி வருகின்ற 27ஆம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு அதனை பின்பு பார்ப்போம் என தெரிவித்தார்…அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் மானிய விலையில் சர்க்கரை,எண்ணெய்,பருப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார். அரிசிக்கான டெண்டர் விடப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்…


Watch – YouTube Click

What do you think?

அருந்ததிபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தக பை, நோட் புக், பென்சில் அதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்

ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து அல்லித்துறையில் இன்று அதிமுகவினர் போராட்டம்.