in

புதுச்சேரியில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு

புதுச்சேரியில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு. கிருமாம்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் சதா, இவர் தலைமையில் அதே பகுதி சேர்ந்த 25 பேர் குழுவாக சேர்ந்து கண்ணா விசைபடகு மற்றும் வலைகளை வாங்கி மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நங்கூரம் போட்டு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கடந்த 14ஆம் தேதி திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது…

தகவல் அறிந்து மீனவர்கள் விசைப்படகு மூலம் சென்று தீயை அணைத்தனர் இருப்பினும் படகு, வலைகளும் தீயில் சேதமானது, நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

படகு தீப்பிடித்து எரியும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

What do you think?

புதுச்சேரி மங்களம் தொகுதியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 100 நாள் வேலை திட்ட பணியை தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி ஆளும் அரசு குப்பை கூடையாக இருக்கும் அரசாங்கம் வைத்தியலிங்கம் எம்பி கடும் விமர்சனம்