in

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட டெப்பாசிட் பெறாது


Watch – YouTube Click

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட டெப்பாசிட் பெறாது

 

அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீர்காழியில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அம்பேத்கரின் ஆய்வுகள் குறித்து பேசிய திருமுருகன் காந்தி மீது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கின் விசாரணை நாகை நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை தீர்ப்பில் திருமுருகன் காந்தியை விடுதலை செய்து நாகை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில் ; தமிழகத்தில் யாருக்கு ஆதரவு என்பதை மே 17 இயக்கம் முடிவு செய்யவில்லை.

ஆனால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் மதவாததிற்கும் எதிராக எங்களின் பரப்புரை இருக்கும்.

தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது, டெப்பாசிட் கூட வாங்கமாட்டார்கள். 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பல கொடுமைகளை மோடி ஆட்சியில் அனுபவித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாஜக தனித்து நிற்பதால் டெப்பாசிட் கூட வாங்கமுடியாது பரிதாபமாக நிலையில் பாஜக உள்ளது. வலிமையான கூட்டணி இல்லாததால் இந்திய அளவிலும் பாஜக தோல்வியை தழுவும். தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருப்பதை வரவேற்கிறோம். எந்த கூட்டணியாக இருந்தாலும் மக்களுக்காக போராடும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வோம். ஆனால் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

மத்திய அரசை கண்டித்து கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்

பாகிஸ்தானுக்கு சீனா கடன் உதவி