in

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது


Watch – YouTube Click

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.வட தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், கோயம்புத்தூரில் 10 cm, கடலூரில் 8 cm, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் தலா 6 cm மழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக திருத்தணியில் 42.3 degree செல்சியசும் குறைந்தபட்சமாக நாமக்கலில் 20.0 degree செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களின் சம வெளி பகுதிகளில் 36-42 degree செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதி, வட தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36-39 degree செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் 35-36 degree செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 21-26 degree செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 40.2 degree செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 37.6 degree செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.
நாளை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30km முதல் 40km வரை காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மீனவர்களுக்கான எச்சரிக்கை குமரிகடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளிலும், மற்றும் தென்மேற்கு வாங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65km வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி லாரி சங்கத்திற்கு வாக்குப்பெட்டி வைத்து தேர்தல்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா