in

பழனி உழவர் சந்தையில் கடைகளை முறைகேடாக ஒதுக்குவதாக அலுவலருடன் விவசாயிகள் வாக்குவாதம்

பழனி உழவர் சந்தையில் கடைகளை முறைகேடாக ஒதுக்குவதாக அலுவலருடன் விவசாயிகள் வாக்குவாதம்

 

பழனி உழவர் சந்தையில் கடைகளை முறைகேடாக வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாக தெரிவித்து அலுவலருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உழவர் சந்தை உள்ளது. தமிழகத்திலேயே சிறப்பாக காய்கறிகள் விற்பனையாகும் உழவர் சந்தையில் இதுவும் ஒன்றாகும். இங்கு சுமார் 100 கடைகள் உள்ளன. இங்கு வரும் விவசாயிகளுக்கு அன்றாடம் கடைகள் குழுக்கள் முறையில் ஒதுக்கப்படுகிறது.

உழவர் சந்தையின் வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் எல்லோருமே வெளியூரை சேர்ந்த பெண்கள் என்பதால் சரிவர வேலைக்கு வர முடிவதில்லை.

இந்நிலையில் சமீப காலமாக கடைகளை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாக புகார் எழுந்த நிலையில் இன்று அதிகாலையில் வந்த விவசாயிகள் இருந்த கடையில் அவரவர் கடைகளை வைத்துக் கொண்டனர்.

பின்னர் வந்த விவசாயிகளுக்கு கடைகள் இல்லாமல் போனதால் அலுவலர் முரளி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாலையில் உழவர் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இரு விவசாயிகளுக்கு ஒரு கடை என பேசப்பட்டு விரைவில் பிரச்சனை சீர் செய்யப்படும் என தெரிவித்த பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

What do you think?

“அட்யா பட்யா” விளையாட்டு போட்டி தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு இடையே நடைபெற்றது

பழனி முருகன் கோயில் மலை மீது பெண்கள் வள்ளி கும்மி ஒயில் நடனம்