தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் சட்டமன்ற,நாடாளுமன்ற உள்ளாட்சி அமைப்புகளில் அருந்ததியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும்
தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் அதியமான் பேட்டி
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் “தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு” சார்பில் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி குறித்த மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மண்டல அளவிலான முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின் தலைவர் அதியமான் பேசும் போது,
பட்டியல் பிரிவு மக்களில் உள்ள அருந்ததியர் மக்கள் அதிகமாக மேற்கு மாவட்டங்களில் திரளாகவும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ள முக்கிய சாதிகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 70 ஆண்டு கால சட்டமன்ற நாடாளுமன்ற வரலாற்றில் அருந்ததியர் சமூகத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் போதிய முக்கியத்துவம் வழங்காததால், அரசியல் ரீதியாக அருந்ததியர் சமூகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற,உள்ளாட்சி அமைப்புகளில் அருந்ததியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம் என்றார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசின் நிரப்பப்படாத காலியிட பணியிடங்கள் ஒன்பது லட்சத்திற்கும் மேல் உள்ள காலி பணியிடங்கள் அரசு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஐடி, ஐஏஎம் மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரிய பள்ளிகள், உள்ளிட்ட பள்ளி,கல்லூரி பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வகைப்படுத்துதல் நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டால்தான் எதிர்வரும் 2025 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் போது பயன்பெற முடியும் என்று தெரிவித்தார்.