in

திருவாரூரில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில் காலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மிக அதிகமாக திருவாரூரில் 10 சென்டிமீட்டர் மழை பெய்தது மாலை முதல் கனமழை சற்று குறைந்து மிதமான மழை பெய்து வருகிறது.

தற்போது இரவிலும் மழை தொடர்வதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் அருகாமையில் உள்ள நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் காலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து மழை பெய்தால் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

What do you think?

ஏழுமலையான் கோவில் சுப்ரபாத சேவையில் ஜோதிகா

திருத்துறைப்பூண்டிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் குழுவினர் வருகை