விருதுநகரில் மண்ணுளிப் பாம்பை வைத்திருந்ததாக ஆறு பேரை பிடித்து விசாரணை
விருதுநகரில் மண்ணுளிப் பாம்பை வைத்திருந்ததாக ஆறு பேரை பிடித்து விசாரணை. கார் பறிமுதல் வண உயிரின குற்றப் புலனாய்வு பிரிவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் இணைந்து அதிரடி
விருதுநகரில் ஒரு வருடம் ஆக வீட்டில் வைத்து மண்ணுளிப் பாம்பை வைத்திருந்ததாகவும் அதனை விற்பனை செய்யும் போது ஆறு பேரை வன குற்றப்புலனாய்வு துறை பிரிவினர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் இணைந்து பிடித்தனர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரையில் செயல்பட்டு வரும் வன குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு விருதுநகர் ஒரு வீட்டில் வைத்து மண்ணுளி பாம்பு வைத்திருப்பதாகவும் அதனை விற்பனை செய்ய முயல்வதாகவும் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வன குற்ற புலனாய்வுத் துறை ரேஞ்சர் சசிதரன் தலைமையிலான வனத்துறையினரும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் கார்த்திக் உத்தரவின் பேரில் பாரஸ்டர் பொன்னம்பலம் மற்றும் வனக்காப்பாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையிலான ஒரு பிரிவினரும் விருதுநகர் சென்று பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் வயது 50 வீட்டில் சோதனை நடத்தினர் .
அப்போது சுரேஷ் வீட்டில் சுமார் 4 1/2 கிலோ எடை உள்ள பெரிய அளவிலான மண்ணுளிப் பாம்பு ஒன்று இருந்தது. மேலும் அந்த வீட்டில் சுரேஷுடன் இருந்த மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் வயது 60 மல்லாங் கிணறு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் கூமாபட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான கடற்கரை வயது 47 ரவி 38 மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சேகர் வயது 53 ஆகிய பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இதுகுறித்து வனத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சுரேஷ் லாரி டிரைவராக பணிபுரிவதாகவும் அவர் ஆந்திராவில் இருந்து மண்ணுளி பாம்பை கொண்டு வந்ததாகவும் கடந்த ஒரு வருடமாக தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் மற்றவர்கள் மண்ணுளிப் பாம்பை விலை பேசுவது தொடர்பாக வந்தவர்கள் எனவும் தெரிவித்தார். பாம்பை பறிமுதல் செய்வதற்காக வனத்துறையினரை வியாபாரிகளாக பேசுவது போல் சென்றோம் எனவும் கூடுதலாக தெரிவித்தார்.தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.