in

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி திறப்பு விழா

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த கட்டிடத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி திறப்பு விழா மாணவர்கள் மகிழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதி அமைத்து தர வேண்டும்

என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் விடுதி தற்போது புதுப்பிக்கப்பட்டு 48 மாணவர்கள் தங்கும் வகையில் இன்று முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்க்காக விடுதியை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவர்களின் விடுதி அறைகள் மற்றும் சமையலறையும் பார்வையிட்டார் இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் பொறுப்பு ராஜாராமன் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

ரூ.70 ஆயிரம் கோடி தமிழக அரசிடம் உள்ளது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தகவல்.

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.