கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தமிழக வெற்றி கழக அலுவலகம் திறப்பு விழா….
தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா மாவட்ட பொருளாளர் வினோத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் , தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிஜாம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் மாற்று கட்சியினர் 50-த்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் துண்டு அணிவித்து கட்சியில் இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்