in

தஞ்சை மாவட்டம் கோட்டூர் SNJ குழுமத்தின் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலையின் பந்தநல்லூர் பகுதி கரும்பு அலுவலகம் திறப்பு விழா.

தஞ்சை மாவட்டம் கோட்டூர் SNJ குழுமத்தின் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலையின் பந்தநல்லூர் பகுதி கரும்பு அலுவலகம் திறப்பு விழா

 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோட்டூரில் இயங்கி வந்த ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை பல்வேறு நிர்வாக சிக்கலால் ஏழு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டது நீதிமன்ற உத்தரவின் படி இந்த ஆலையை பிரபல எஸ்.என்.ஜே குழுமம் வாங்கியது. இந்த ஆலையை வருகிற ஆண்டு முதல் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. கோட்டூர் எஸ்.என்‌.ஜே குழுமத்தின் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலையின் பந்தநல்லூர் கரும்பு மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது.

பந்தநல்லூர், மகராஜபுரம் கதிராமங்கலம், நெய் குப்பை, பாலூர், காமாட்சிபுரம், வேட்டமங்கலம் செருகடம்பூர் கருப்பூர் மரத்துறை, திருமங்கைசேரி அழகேசபுரம் குறிச்சி காட்டூர் மண்டபம் கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கரும்பு பயிரிட தங்கள் ஆர்வத்தினையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் தரப்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தற்சமயம் நடவுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தேவையான அலுவலர்களை நியமனம் செய்துள்ளதாகவும் விரைவில் கோட்டூர் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை இயக்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் புண்ணியமூர்த்தி கோட்டூர் சர்க்கரை ஆலை பொது மேலாளர் கரும்பு அவர்கள் வரவேற்புரையாற்றினார், திருஞானம் பொது மேலாளர் கரும்பு பெண்ணாடம் சர்க்கரை ஆலை அவர்கள் நவீன காலத்திற்கு ஏற்றார் போல் கரும்பு நடவினையும், கரும்பு அறுவடையையும் எந்திரங்கள் மூலமாக எளிமையாக எப்படி மேற்கொள்வது செலவினங்களை கட்டுப்படுத்துவது எப்படி என்றும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் தரப்பில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று இனி வரும் காலங்களில் விவசாயிகள் கோரியது போல கரும்பு பணம் விரைந்து பட்டுவாடா செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்க பரிந்துரைக்கப்படும் என்றும் விரைவில் கோட்டூர் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை இயக்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

 பந்தநல்லூர் கோட்ட அலுவலக திறப்பு விழாவில் திரு. A. புண்ணியமூர்த்தி கோட்டூர் சர்க்கரை ஆலை பொது மேலாளர் கரும்பு அவர்கள் வரவேற்புரையும், திரு. திருஞானம் பொது மேலாளர் கரும்பு பெண்ணாடம் சர்க்கரை ஆலை அவர்கள் கரும்பு பயிரில் மகசூலை கூட்டுவது அதன் மூலம் லாபத்தை இரட்டிப்பாக்குவது எப்படி என்றும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நவீன காலத்திற்கு ஏற்றார் போல் கரும்பு நடவினை எந்திர அறுவடைக்கு ஏற்றார் போல் 4.5 அடி பார் அமைத்து கரும்பு மகசூலைக் கூட்டி அறுவடையை எந்திரங்கள் மூலமாக மேற்கொண்டால் வெட்டுக்கூலி செலவினங்களை கட்டுப்படுத்தி அதிக லாபம் பெற முடியும் என்றும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.விழா முடிவில் திரு விஜயகுமார் பந்தநல்லூர் கரும்பு ஆய்வாளர் அவர்கள் விவசாயிகளுக்கு நன்றி உரை வழங்கினார்.

What do you think?

சபரிமலைக்கு தனது மகளுடன் சைக்கிளில் புனித யாத்திரை செல்லும் நடமாடும் தேநீர் வியாபாரி

மக்கள் நீரோடையை கடப்பதற்கு புதிய பாலம் அமைத்து தர கோரிக்கை