கருணாநிதி நினைவிடம் திறப்பு
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார்.
இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
கருணாநிதியின் சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை பொதுமக்கள் பார்வைக்காக, இன்று மாலை 7.00 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.