வருமான வரித்துறை சோதனை… குட் பேட் அக்லி படத்திற்கு வந்த ஆப்பு
ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம் மற்றும் வீடுகள் உட்பட ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.,
அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட எட்டு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. வேலம்குச்சா வெங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு, ஒரு முக்கிய தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர். தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸை நடித்தி வருகிறார். சமீபத்தில் அவர் தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக மாநில அரசால் நியமிக்கப்பட்டார்.
தில் ராஜு தயாரிப்பான. பான்-இந்திய movie..யான கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தாலும் , அவரது மற்றொரு தயாரிப்பான சங்கராந்திகி வாஸ்துன்னம், ஐந்து நாளில் 161..கோடியை அள்ளி நல்ல வருவாயை ஈட்டித் தந்தது. தில் ராஜு…விடம் மட்டுமின்றி அஜித்தின்’ குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து. இதனால் குட் bad ugly படம் வெளியாவதிலும் தாமதம் ஏற்படும் என்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.