in

பா.ஜ வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு


Watch – YouTube Click

பா.ஜ வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

 

தேர்தல் துறைக்கு வந்த புகாரின் பேரில் புதுச்சேரி வில்லியனுாரில் பா.ஜ வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவத்தால் பரபரப்பு.

பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பா.ஜ., காங்., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ., கட்சி வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு வில்லியனுாரில் உள்ள அவரது தீவிர ஆதரவாளர் ரவிக்குமார் பணம் பட்டுவாட செய்வதாக தேர்தல் துறைக்கு புகார் சென்றுள்ளது.

புகாரின் பேரில் சென்னை வருமான வரித்துறை மற்றும் புதுச்சேரி தேர்தல் துறை அதிகாரிகள் பி.ஒய் 01 ஜி 0585 என்ற இணோவா காரில் வந்த ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று மாலை 4:30 மணியளவில் தில்லை நகரில் உள்ள ரவிக்குமார் வீடு மற்றும் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் உள்ள மோகித் கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரவு 9:30 மணிவரையில் நடந்த சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பா.ஜ., வேட்பாளர் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட சம்பவத்தால் வில்லியனுாரில் பரபரப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

மகனை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்த பெற்றோர்

பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு