in

கீழக்கரையில் மது மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு

கீழக்கரையில் மது மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு. போதை விற்பனையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு சமீப காலமாக கீழக்கரை முழுவதும் கள்ள மது மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்து வந்தனர்

மேலும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டலில் மது மற்றும் போதை பொருள் விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்

இது தொடர்பாக சமூக ஆர்வலர் கீழை பிரபாகரன் தொடர்ச்சியாக கண்காணித்து விற்பனை செய்த கடையையும் பகுதியையும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மது மற்றும் போதைப் பொருள் விற்பனை வியாபாரிகள் அடியாட்களை கொண்டு சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அங்குள்ளவர்கள் தடுத்து அவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் கீழக்கரையில் சமீப காலமாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதை பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போதைப்பில் தடுப்பதற்கு பொதுமக்களோ சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்தாலோ அவர்கள் மீது தாக்குதல் நடந்து வருவதால் கீழக்கரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சத்தில் உள்ளனர் . கீழக்கரை டிஎஸ்பி மற்றும் எஸ்பி சார்பாக முறையாக ஆய்வு செய்வதில்லை என்றும் மாவட்ட எஸ்பிக்கு சரியான தகவலை வழங்குவதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

What do you think?

கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை நவகிரக கோவில்களில் பிரதானமான சூரியனார் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

ஆர் எஸ் மங்கலத்தில் மாட்டின் தலையை வெட்டி ரோட்டில் வைத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது