in

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா

 

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் மூவர்ண கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். 31 பயனாளிகளுக்கு 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடன் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு பல்வேறு துறையின் கீழ் 20 லட்சத்து 60 ஆயிரத்து 956 ரூபாய் மதிப்பில் 31 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தன்னார்வலர்கள்,மாணவ மாணவிகள் என 321 பேருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ரூபேஷ் குமார் மீனா, நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் மூர்த்தி,மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

78- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நெல்லையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பேரணி