52-க்கு மேற்பட்ட சமூக நல அமைப்பினருடன் சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆலோசனை
புதுச்சேரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 52-க்கும் மேற்பட்ட சமூக நல அமைப்பினர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்றும், யார் வேட்பாளர் என்று அடுத்தகட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுயேட்சை எம்எல்ஏ நேரு, புதுச்சேரியில் பாஜக வெற்றி பெறுவது தடுப்பதே தங்களுடைய முதல் நோக்கம் என்றும், ஆண்ட மத்திய அரசுகள் புதுச்சேரியை கிள்ளு கீரையாக நினைத்து எந்த திட்டங்களையும் செய்யாமல் வஞ்சித்து வருகின்றன என்றும், அதனால் தான் முதலமைச்சர் ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் என்று தொடங்கிய ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து மக்களுக்கான உழைத்து வருகிறார்.
ஆனால் இந்த முறை முதலமைச்சரரை மிரட்டி பாஜக கூட்டணி வைத்து அவருக்கு துரோகத்தை இழைத்து வருவதாக கூறிய அவர். கூட்டணி தர்மத்தை மீறி 3 நியமன எம்.எல்.ஏக்கள், ஒரு நியமன எம்.பியை பாஜக நியமித்ததாகவும்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடவும் பாஜக முயற்சி செய்ததாக கூறிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பாராளுமன்ற உறுப்பினர் பாஜகவை சேர்ந்தவர் தான் இருப்பார் என கூட்டணி தர்மத்தை மீறி என்.ஆர்.காங்கிரசை கூட கலந்தாலோசிக்காமல் பாஜகவினர் பேசி வந்ததாக கூறினார்.
எனவே தான் சமூக அமைப்புகள் ஒன்று கூடி பாராளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த ஆலோசனை நடத்தியுள்ளோம். அனைவரும் பல கருத்துகளை கூறியுள்ளனர்.
புதுச்சேரியில் ஆளும் அரசுடன் பாஜக இருந்தும் புதுச்சேரியை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மக்கள் ஓட்டு போட்டு தவறான கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றார்.