ப்ரீ புக்கிங்கில் கோடிகளை அள்ளிய இந்தியன் 2
இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் …ணுக்காக பரபரப்பாக சுற்றி கொண்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
சங்கர் தயாரிப்பில் Lycaa Production…னில் July 12..ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் .
இப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது நான் இந்த துறைக்கு வந்து 52 வருடங்கள் ஆகிவிட்டது.
மூன்று தலைமுறைகளை சந்தித்து விட்டேன் என்னுடைய லட்சியமே டைரக்டர் பாலச்சந்தரை போல் நிறைய பேரை சினிமா துறைக்கு கொண்டு வர வேண்டும் .
என்னைப் போன்ற நடிகர்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
இப்படித்தான் ரசிகர்களுக்கு நான் பட்ட கடனை அடைக்க முடியும் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவை என்னால் என்றும் மறக்க முடியாது.
சினிமாவுக்கு மொழி எல்லை இல்லை. கலைஞர்கள் மொழி எல்லையை அழித்து விட்டார்கள் இதற்குச் சான்று கே விஸ்வநாத், பாலச்சந்தர், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் தான்.