in

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது என மதுரையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது

காயங்கள் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை, கிரிக்கெட்டில் அரசியல் எதும் நடைபெறவில்லை, கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் எந்தவொரு ஏற்ற தாழ்வுகளையும் பார்ப்பதில்லை, கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்களின் ஒத்துழைப்பால் தான் நான் இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக உருவாகி உள்ளேன், IPL கிரிக்கெட்டில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளேன், IPL கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக TNPL போட்டி மாறி உள்ளது

TNPL போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 கிரிக்கெட் வீரர்கள் உருவாகி உள்ளனர், TNPL கிரிக்கெட் போட்டியில் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது, TNPL கிரிக்கெட் தொடக்கத்தை விட தற்போது முன்னேற்றம் அடைந்து உள்ளது, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்க்கு பெற்றோர்கள் ஊக்கம் அளிக்கிறார்கள், மீடியா முன் பேசுவதற்க்கு தயக்கமாக உள்ளது, பின்னர் எப்படி சினிமாவில் நடிப்பேன், சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை” என கூறினார்

What do you think?

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அவசர கதியில் திணிப்பு ஆசிரியர்கள் போராட்டம்

2026-ல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று அண்ணாமலை முதல்வராக ஆட்சி அமைப்பார்- ஜமால் சித்திக் பேட்டி