in

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்ஜ் ஓர்க் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் 41 வது வார்டு பகுதிகளான காமராஜர் நகர், புற்றுக் கோயில் தெரு, சுருளி கோவில் தெரு, AR.நகர், TRநகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆமை வேகத்தில் நடைபெறக்கூடிய பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாட்டு நடும் போராட்டம் நடத்த போவதாக அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக கான்கிரீட் மிக்சுகளை கொட்டி தற்காலிகமாக சாலையில் பேட்ஜ் ஒர்க்கில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் பேட்ச் ஒர்க் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கையில் நாற்றுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்ஜ் ஒர்க் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் ஒப்பந்த பணி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

மேலும் பொதுமக்கள் எவ்வளவு இன்னல்களுக்கு என்பதை நேரில் வந்து தங்கள் பகுதியில் ஆய்வு செய்யும்படியும் பொதுமக்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதனால் செய்வதறியாது தவித்த அதிகாரிகள் ஒவ்வொரு தெருப்பகுதிக்கும் மக்களுடன் சென்றனர். அப்போது தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அப்பகுதி பெண்கள் கையில் வைத்திருந்த நாற்றை சாலையில் நட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதாகவும் குண்டும் குழி சாலைகளை சீரமைத்து தருவதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

What do you think?

தீவிரவாத செயல்களை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருச்சியில் மத்திய இணை அமைச்சர் ஷோபா பேட்டி.

2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெரும் என நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.