இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் … இவர்தான்… யூகித்து பதிவினுள் செல்லவும்
இந்தியாவின் பணக்கார காமெடி நடிகரான ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நாமெல்லாம் நினைப்பது போல ஹீரோக்கள் தான் சினிமாக்களில் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று ஆனால் அவர்களுக்கு இணையாக ஒருவர் 500 கோடிக்கு மேல் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
இவர் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நகைச்சுவை நடிகரான இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டென பள்ளி அருகே உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவர். இவரின் தந்தை மரஆசாரி.
இந்த நடிகருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கோதாவரி மாவட்டத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் மிமிக்ரி செய்வதில் வல்லவர். இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பகபகலு என்ற நிகழ்ச்சியின் இயக்குனர் ஜந்தையாலா, இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஆஹா நான் பெல்லண்டா என்ற திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார். 37 ஆண்டுகளாக திரைத்துறையில் வலம் வரும் இவர் இதுவரை ஆயிரம் படத்திற்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
இவரின் நடிப்பை கௌரவிக்கும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் ஒரே நகைச்சுவை நடிகர் இவர்தான்.
ஒரு படத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் . விளம்பர படங்களில் நடிப்பதற்கும் ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார். இவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் உள்ளது, கோடிக்கணக்கில் விவசாய நிலங்களை வாங்கி விவசாயம் செய்து வருகிறாராம்.
இவருக்கு ஹைதராபாத்தில் ஒரு சொகுசு பங்களாவும் பென்ஸ், ஆடி போன்ற கார்களும் வைத்திருக்கிறார். இந்த நடிகர் யார் என்று யூகித்து விட்டீர்களா இவர் தமிழிலும் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார் அவர் யார்?