இந்தியாவிலேயே மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பெற்று வருவதாக ஆலம்பூண்டியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு தனியார் துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ரங்க பூபதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கபூபதி கல்லூரி நிறுவனர் வழக்கறிஞர் ரங்கபூபதி, செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் வட்டார கல்வி குழுத் தலைவர் நெடுஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் ரங்கபூபதி கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகமை தொடங்கி வைத்துசிறப்புரையாற்றினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்குபல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக விடியல் பயணத்தை ஏற்படுத்தி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில்படித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுஉள்ளதாக தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்
இந்தியாவிலேயே மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக வேலை வாய்ப்புகளை இளைஞர்கள் பெற்று வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு முகாமில் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் ,ஒலக்கூர், மயிலம், அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் 34 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து நேர்காணல் நடத்தி 1200 நபர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்த நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, முல்லை,செஞ்சி மகளிர் திட்ட மேலாளர் ரஞ்சிதா, உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட மகளிர் உதவி திட்ட அலுவலர் கமலவள்ளி நன்றி கூறினார்