in

எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தில் “INNOVA FEST 24” கண்காட்சி


Watch – YouTube Click

எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தில் 333 புதிய கண்டுபிடிப்புகளை ஜெட்லி உலக சாதனை

 

திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தில், புதிய தொழில்நுட்பத்தையும், கண்டுபிடிப்புகளையும் காட்சிபடுத்தும் வகையில் “INNOVA FEST 24” என்ற கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணவர்களின் திறமையாலும் முயற்சியாலும் ஏறத்தாழ 333 புதிய கண்டுபிடிப்புகளை ஜெட்லி உலக சாதனைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியை 50 கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10,000 மாணவர்கள் வந்து பார்வையிட்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை இராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் மருத்துவர் திரு ஆர்.சிவக்குமார், இணைத் தலைவர் திரு .எஸ்.நிரஞ்சன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர் .

இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் R & D ஆய்வக மையம், மின்காந்தவியல் மையத்தின் துணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு.பாலகிருஷ்ணன் இஸ்லாவத் மற்றும் மேம்பாட்டுக் கணினி மையத்தின் இணை இயக்குநரான திரு பி.விமல் லக்ஷ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி எஸ்.ஆர்.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புல முதன்மையர் முனைவர் ஆர். ஜெகதீஸ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். ராமாபுரம் மற்றும் திருச்சி எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைமை இயக்குனர் முனைவர் என் .சேதுராமன், திருச்சி எஸ்.ஆர்.எம் இயக்குனர் என். மால்முருகன், துணை இயக்குனர் மருத்துவர் என்.பாலசுப்ரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் , புதிய கண்டுபிடிப்புகளே வளமான இந்தியாவை உருவாக்கும் என்றும் மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மருத்துவத்துறை , பொறியியல் , மேலாண்மை, பொருளாதாரம், கணினி, அறிவியல், உணவு மேலாண்மை என பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 333 புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். அவற்றை IIT, NIT போன்ற நிறுவனங்களில் இருந்து நடுவர் குழு நியமிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்தனர். இக்கண்காட்சியை 50 கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10,000 மாணவர்கள் வந்து பார்வையிட்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் .

நிகழ்ச்சியின் இறுதியில் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் மருத்துவர் திரு ஆர்.சிவக்குமார் அவர்களிடம் ஜெட்லி பதக்கம் மற்றும் சாதனை விருது வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் தை மாத அமாவாசை- காலையில் சிறப்பு பூஜை

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய உணவு