நாகையில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம்; 3346 மெட்ரிக் டன் நெல் இன்று வரை கொள்முதல் தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல முதுநிலை மேலாளர் தகவல்
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காத நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி கானல் நீராகவே சென்றுவிட்டது. அவ்வப்போது திடீரென பெய்து வந்த மழை நீரை குளங்களிலும் பண்ணை குட்டைகளிலும் தேக்கி வைத்து மாவட்டத்தில் சில பகுதி விவசாயிகள் மட்டும் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர் இந்த நிலையில் தற்போது குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 11 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதுவரை 3,346 மெட்ரிக் டன் நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல முதுநிலை மேலாளர் சிவப்பிரியா தெரிவித்துள்ளார்.