in

நெல்லை டவுன் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

நெல்லை டவுன் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

 

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் நெல்லை டவுன் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்களவைக்கான தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனை ஒட்டி திமுக அதிமுக, பாஜக உன்னிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் நெல்லை மாநகர் பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் தலைமையில் டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் முன்பு இருந்து பிரச்சாரத்தை தொடங்கியவர் சேரன்மகாதேவி சாலை, பெரிய தெரு, ஆசாத் ரோடு, தொண்டர் சன்னதி மூக்கு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் சென்று பொது மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, மேயர் சரவணன் தேவாலய உபதேசிகள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யானந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மாற்றத்தை ஏற்படுத்திட ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் திருப்பத்தூரில் சீமான் பரப்புரை

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது விரும்பி வந்து எம்ஜிஆர் பாடலை பாடிய மூதாட்டி…