மக்கள் பிரதிநிதியாவதே உள் விருப்பம் தமிழிசை பேட்டி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதை ஒட்டி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த போது அவசரமாக கொரோனா காலத்தில் புதுச்சேரிக்கு செல்ல சொன்னார்கள்..
தனி விமானம் இல்லாததால் ஹெலிகாப்டரில் வந்தேன்..ஒன்றரை மணி நேரத்தில் வரவேண்டிய நான் 4 1/2 மணி நேரம் ரிஸ்க் எடுத்து தான் வந்தேன்..ஆனால் மகிழ்ச்சியாக பணியாற்றுகிறேன் என்றார்.
சட்டமன்ற கட்டிடடம் தொடர்பாக கோப்பு என்னிடம் இருப்பதாக சபாநாயகர் கூறிய நிலையில் என்னை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சுயலாபம் இன்றி ராஜ் நிவாஸ் இயங்குகிறது.மக்கள் வரிப்பணம் வீணாக கூடாது என்பதால் தான் கோப்பில் சில கேள்விகள் கேட்கப்பட்டன.
அதிகமாக செலவாகி விட கூடாது என்பது எனது எண்ணம் என தமிழிசை கூறினார்.
தற்போது வரை மக்கள் பணியாற்றுகிறேன்..என் உள் விருப்பம் மக்கள் பிரதிநிதியாவது..தேர்தலில் போட்டியிடுவேன் என கூறவில்லை. அதுவும் புதுச்சேரியில் தான் போட்டியிடுவேன் என சிலர் எழுதியுள்ளனர்..
வெளிமாநிலத்தவர் என எழுதாதீர்கள்.மனவருத்தமாக இருக்கிறது.
அரவிந்தர், பாரதியார் என பலரும் வெளியில் இருந்து வந்தவர்கள்.ஆனால் அவர்கள் எந்த பகுதி என யாரும் பார்க்கவில்லை. என்னையும் வேறு மாநிலம் என நான் எப்போதும் பார்த்ததில்லை என தமிழிசை கூறினார்.
என்னை வேறு பாடுத்தாதீர்கள்.. இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன் என கூறவில்லை… எந்த வழிகாட்டுதல் வருகிறதோ அதன் படி செயல்படுவேன் என தமிழிசை தெரிவித்தார்.