in

சிவகங்கையில் உலக மகளிர் தின விழா


Watch – YouTube Click

சிவகங்கையில் உலக மகளிர் தின விழா

 

சிவகங்கையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 55 சாதனை பெண்மணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார்.

சிவகங்கை அருகே பனங்காடி சாலையில் அமைந்துள்ள ஊனமுற்றோர்கள் மறுவாழ்வு இல்லமான தாய் இல்லத்தில் உலக மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அஜித் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்மணிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் மக்கள் பிரதிநிதிக்களுக்கான சேவை விருதும், இல்லத்தரசிகளுக்கான அறம் விருதும், அரசியவாதிக்களுக்கு ஆளுமை விருதும், தமிழ் பணிக்கான விருதும், மருத்துவ சேவைக்கான விருதும், சமூகப் பணிக்கான விருதும், கல்வி சேவைக்கான விருதும், தொழில் முனைவோருக்கான விருதும் என 55 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா ஆஜீத் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக சிறுவர், சிறுமியர்கள், பரதநாட்டியம், பாட்டுக் கச்சேரி மற்றும் நடனமாடியும் தங்களது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

இந்நிகழ்ச்சிகள் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், இளையான்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் விற்பனை

காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்