in

பாபநாசத்தில் காவல்துறை மற்றும் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா

பாபநாசத்தில் காவல்துறை மற்றும் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்….

மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்துல் கனி பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாபநாசம் உட்கோட்ட காவல்துறை மற்றும் வேலு நாச்சியார் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் உலக மகளிர் தின விழா வேலு நாச்சியார் லயன் சங்க தலைவர் தில்லைநாயகி சம்பந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி அப்துல் கனி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுடைய கல்வி வளர்ச்சி முன்னேற்றம் பற்றி சிறப்புரையாற்றினர்.

இதில் தோளில் குழந்தையோடு பிஎட். கல்வி பயிலும் நரிக்குறவர் இணைத்து சேர்ந்த பெண்ணிற்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி கௌரவித்தனர்.மேலும் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டம் என கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் மகாலட்சுமி, சகாய அன்பரசு, உஷா மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் சம்பந்தம் ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் சாரதா மகளிர் மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்

What do you think?

தஞ்சை திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழா ஜல்லிக்கட்டு போட்டி

கடலூர் கஞ்சா விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, கடும் நடவடிக்கை