என் ஐ டி கல்லூரி போராட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேட்டி
தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து பழுது நீக்குவது குறித்தும் இயந்திரங்கள் கையாள்வது குறித்தும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்
என் ஐ டி கல்லூரியில் மாணவி மீதான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து ஏற்கனவே கைது செய்துவிட்டோம், வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளநிலையில், நிர்வாகத்திடம் இதுதொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுப்பார்கள்.
பாலியல் தொடர்பான புகார் இதுவரையிலும் வரவில்லை, மாவட்ட நிர்வாகத்திற்கு வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்துள்ளனர், சிசிடிவி செயல்படவில்லை என்றால் அதனை மேம்படுத்துவதற்கு நிர்வாகத்திடம் வலியுறுத்துவோம்.
பெண்கள் விடுதியில் நுழைய ஆண்களை அனுமதிப்பதில்லை, இதுபோன்று பிளம்பிங், எலக்ட்ரிஷன் போன்ற பணிகளுக்கு செல்லும்போது வார்டன் துணையுடன் செல்ல வேண்டும், மாறாக தனியே ஆண்கள் செல்லக்கூடாது. இதில் பாதுகாப்புகுறைபாடு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அதனை சரிசெய்ய என்ஐடி நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.