திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் பேட்டி
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,இந்தியாவில் பாஜக கூட்டணி 400 – க்கும் மேற்ப்பட்ட இடங்களிலும், இதே போன்று தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரதப் பிரதமராக அமருவது உறுதி என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் போது, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் 3:30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு இது வரையில் 27 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே தேர்வாணையம் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கி உள்ளது.
திமுக ஆட்சி இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று இளைஞர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு வழங்க முடியும். தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு அவர்களை ஏமாற்றுவது ஒரு வகையில் மோசடியே என்று கூறினார்.
தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் சம்பந்தமான நேர்முகத் தேர்வில் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் குறைவான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது.
கண்டனத்துக்குரியது என்றும் ,இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குமுறையான நீதி வழங்க வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்தார். கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்கும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்றும் இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதற்கு காரணம் தோல்வி பயமே என்று கூறினார் .
மேலும் அவர் பேசும் போது, தமிழகத்தில் மின் வெட்டுக்கு காரணம் என்னவென்றால் மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்துவிட்டால் என் பேச்சிருக்கும் என்று பாடல் பாடி மின்வெட்டிற்கு காரணம் ஊழல் என்னும் மூன்றெழுத்து மட்டுமே காரணம் என்று கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவராக பாஜக தலைவர் அண்ணாமலை பார்க்கின்றார் என்றும், அதனையே அவர் வெளிப்படுத்தி உள்ள நிலையில் இது தவறில்லை என்று கூறினார்.
இந்த பேட்டியின் போது தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.